நாடாளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் சஜித் வெளியிட்ட தகவல்
வோர்ட் பிளேஸில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் அதன் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு சிறந்த முறையில் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களை நேற்று (25) காலை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வோர்ட் பிளேஸில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் அதன் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.