ஆவிகளுடன் பேசும் ரஷ்யப் பெண்... வெளியாகும் பரபரப்பு தகவல்கள்!
Kazhetta Akhmetzhanova என்ற ஆவிகளுடன் பேசுவதாக கூறும் ரஷ்யப் பெண், ரஷ்யா உக்ரைன் போர் முதல், பல்வேறு பரபரப்பை ஏற்படுத்தும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Kazhetta Akhmetzhanova என்ற ஆவிகளுடன் பேசுவதாக கூறும் ரஷ்யப் பெண், ரஷ்யா உக்ரைன் போர் முதல், பல்வேறு பரபரப்பை ஏற்படுத்தும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பலமுறை சுனாமி குறித்து துல்லியமாக கணித்தவரான Kazhetta, பேரழிவு ஒன்று நெருங்கி வருகிறது என்றும், ரஷ்யாவை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
உலகை வியப்பிலாழ்த்தும் சில விடயங்கள் விரைவில் நிகழப்போகிறது என்று கூறும் அவர், ஐரோப்பியர்கள் பலர் விரைவில் உக்ரைனிலுள்ள Odesa என்ற இடத்துக்குக் குடிபெயர இருக்கிறார்கள் என்கிறார்.
எதிர்காலத்தில், பெருவெள்ளம் காரணமாக வேறெங்கும் பாதுகாப்பான இடம் கிடைக்காததால், ஐரோப்பியர்கள் பலர் உயிர் பிழைக்க Odesaவுக்குதான் செல்வார்கள் என தான் நம்புவதாகத் தெரிவிக்கிறார்.
அத்துடன், ரஷ்யா மீதான முழு உலகின் மரியாதையும் அதிகரிக்கும் நிலை உருவாவதால், ரஷ்யாவின் புகழ் மேலும் அதிகரிக்கும் என்கிறார் Kazhetta.
ரஷ்யாவை கோபப்படுத்தக்கூடாது என்பதை எல்லோரும் புரிந்துகொள்வார்கள் என்று கூறும் அவர், முடிவு நெருங்கிவிட்டது என்கிறார்.
அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஐரோப்பாவில் இயற்கைப் பேரழிவுகள் நிகழத் துவங்கும் என்று கூறும் Kazhetta, ஒரு பேரழிவு வருகிறது, மிக பயங்கர வறட்சி ஒன்று வருகிறது, ஐரோப்பிய நாடுகள் பல அந்த வறட்சியால் பாதிக்கப்படும் என்கிறார்.
மக்கள், தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, புதிய வாழுமிடங்களைத் தேடிக்கொள்வார்கள் என்று கூறும் Kazhetta, ஐரோப்பியர்கள் பலர் Odessaவுக்கு குடிபெயர்வார்கள் என்கிறார்.
புலம்பெயர்ந்தோர் பலர் வாழும் ஒரு சிறந்த நாடாக Odessa திகழும் என்று கூறும் Kazhetta, அவர்கள் அங்கே மிகவும் நிம்மதியாக வாழ்வார்கள் என்கிறார்.