ஓய்வு குறித்து முதல் முறையாக ரோகித் ஷர்மா வெளியிட்ட தகவல்!

தனது ஓய்வு குறித்து முதல் முறையாக ரோகித் ஷர்மா பேசியுள்ளார்.

ஏப்ரல் 14, 2024 - 11:23
ஓய்வு குறித்து முதல் முறையாக ரோகித் ஷர்மா வெளியிட்ட தகவல்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் கிடையாது ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக  ரோகித் ஷர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையிலேயே, தனது ஓய்வு குறித்து முதல் முறையாக ரோகித் ஷர்மா பேசியுள்ளார்.

"நான் ஓய்வு பெறுவதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால், வாழ்க்கை எங்கு அழைத்துச் செல்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த நேரத்தில் நான் இன்னும் நன்றாக விளையாடுகிறேன்.

அதனால் நான் இன்னும் சில வருடங்கள் தொடர்தும் விளையாடப் போகிறேன், நான் உண்மையில் உலகக் கிண்ணத்தை வென்றுகொடுக்க விரும்புகிறேன்.

அடுத்த ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. அதிலும் இந்தியாவை வெற்றியடையச் செய்ய வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!