குழந்தைகளிடையே நோய் பரவும் ஆபத்து

தற்போது நிலவும் வரட்சியான காலநிலையால் குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆகஸ்ட் 6, 2023 - 12:03
குழந்தைகளிடையே நோய் பரவும் ஆபத்து

தற்போது நிலவும் வரட்சியான காலநிலையால் குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா, நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் இன்றைய நாட்களில் சர்வ சாதாரணமாக காணப்படுவதாக தெரிவிக்கின்றார்.

நீர்ச்சத்து குறைபாடு

எனவே, குழந்தைகளுக்கு அதிகளவு திரவ உணவுகளை குடிக்க கொடுக்க வேண்டும் என குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா குறிப்பிடுகிறார்.

வறண்ட காலநிலையுடன் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்களும் பரவக்கூடும் என வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!