வெப்பநிலை அதிகரிப்பு - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த பகுதிகளில் வெப்பம், மனித உடலால் உணரப்படும் 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்படி பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன், முடிந்தவரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சிறு குழந்தைகளை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முடிந்த வரையில் வெள்ளை அல்லது வெளிர் நிற, இலகுரக ஆடைகளை அணியுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.