சட்டவிரோத துப்பாக்கிகள் பற்றிய தகவல்களுக்கு வெகுமதி அதிகரிப்பு
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் நாட்டில் தொடர்ந்தும் புழங்குவது அவதானிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு வழங்கப்படும் வெகுமதி நிதியை அதிகரிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அண்மைக்காலமாக பதிவாகியுள்ள குற்றச் செயல்களை கருத்திற்கொண்டு, சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் நாட்டில் தொடர்ந்தும் புழங்குவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தனிப்பட்ட தகவல் வழங்குபவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த பொலிஸ் வெகுமதி நிதியை அதிகரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.