ஹட்டனில் வீடு திரும்பியவர் பஸ்ஸிலேயே மரணம்

வைத்தியசாலைக்குச்சென்றுவிட்டு பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை பஸ்ஸிலேயே உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒக்டோபர் 20, 2023 - 17:40
ஹட்டனில் வீடு திரும்பியவர் பஸ்ஸிலேயே மரணம்

வைத்தியசாலைக்குச்சென்றுவிட்டு பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை பஸ்ஸிலேயே உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்கோயா, படல்கல மேல் பிரிவைச் சேர்ந்த  ஆறுமுகன் தியாகேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் முச்சக்கரவண்டி சாரதி என்பதுடன், மருந்து எடுப்பதற்காக, மாதம் ஒருமுறை கண்டி போதனா வைத்தியசாலைக்கு சென்று வருபவர்.

அவர் நேற்று (19) வீட்டை விட்டு வெளியேறி, இன்று (20) காலை கிளினிக்கிற்குச் சென்று, தனியார் பஸ்ஸில் வீடு திரும்பியுள்ளார்.

ஹட்டனில் இருந்து போடைஸ் நோக்கிச் ​சென்ற  ​பஸ்ஸில் பயணித்த போது அவர் உயிரிழந்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளில் ஒருவர் பஸ்ஸில் இருந்து இறங்காதது குறித்து  ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு தெரிவிக்கப்பட்டது.  
அவர்கள் இருவரும் பயணியை சோதனையிட்டதில் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

ஹட்டன் பொலிஸாரின் பணிப்புரையின் பிரகாரம் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலம் அதே பஸ்ஸில் டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு கையளிக்கப்பட்டது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!