மின்கட்டண உயர்வின் எதிரொலி - உணவகம், பேக்கரி பொருட்களும் விலை திருத்தம்
மின்சார கட்டணத்தை 18 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

மின்கட்டண உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து பேக்கரி மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளை திருத்துவது குறித்து பரிசீலிக்க உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
மின்சார கட்டண திருத்தத்தின் மூலம் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலுக்கு பிறகு, விலை திருத்தம் செய்யும் முறை அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
மின்சார கட்டணத்தை 18 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
மின் கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வரும் என PUCSL விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நிபந்தனைகளின் அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூன் 30, 2024 வரை அமுலில் இருக்கும் என்பதுடன், இது இந்த ஆண்டுக்கான மூன்றாவது மின் கட்டணத் திருத்தமாகும்.