தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்
பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான யோசனை பாராளுமன்றில் 177 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான யோசனை பாராளுமன்றில் 177 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆதரவாக 177 வாக்குகள் பதிவாகியிருந்ததுடன், எதிராக எவரும் வாக்களிக்கவில்லை. உறுப்பினர் ஒருவர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லைஇ
இதனையடுத்து, 2002ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அதிகாரிகளைப் பதவி நீக்கும் சட்டத்தின் 17 ஆவது பிரிவுக்கு அமைய தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.