யுத்தத்தில் இடம்பெயர்ந்த கனகர் கிராம மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை
யுத்த சூழ்நிலை காரணமாக 1987ஆம் ஆண்டு, அம்பாறை - கனகர் கிராமத்தில் இருந்து இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

யுத்த சூழ்நிலை காரணமாக 1987ஆம் ஆண்டு, அம்பாறை - கனகர் கிராமத்தில் இருந்து இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் பேரில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் இன்று (11) மேற்கொள்ளப்பட்டது.
கனகர் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் காணியில் அம்மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான சுத்திகரிப்பு வேலைத்திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனின் கோரிக்கையின் பேரில், உள்ளூராட்சி அமைப்புகள் மற்றும் IBC ஊடக நிறுவனத்தின் தலைவர் பாஸ்கரன் ஆகியோரின் ஆதரவுடன் நடைபெற்றது. (நூருல் ஹுதா உமர்)