அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க இதுவரை நடவடிக்கை எடுக்காததால், தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க இதுவரை நடவடிக்கை எடுக்காததால், தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
மின் கட்டணங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்ட போதிலும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் இன்னும் அப்படியே இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
மின்சாரக் கட்டண குறைவுக்கு அமைய, பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வீட்டு நுகர்வோருக்கான மின் கட்டணம் இருபது சதவீதமும், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் முப்பது சதவீதமும் கடந்த ஜனவரி மாதம் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.