கட்டணம் குறைப்பு; ஒரேநாளில் கடவுச்சீட்டு பெறுவோர் மகிழ்ச்சி!

ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் 20 ஆயிரம் ரூபாய் கட்டணமாக அறவிடப்பட்டு வந்தது. 

ஜுன் 28, 2023 - 15:05
கட்டணம் குறைப்பு; ஒரேநாளில் கடவுச்சீட்டு பெறுவோர் மகிழ்ச்சி!

ஒருநாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்களைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் 20 ஆயிரம் ரூபாய் கட்டணமாக அறவிடப்பட்டு வந்தது. 

தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேச செயலாளர் அலுவலகத்தில் மூலம் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் நடைமுறையில் அதனைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது என்று குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹவர் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!