மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு பட்டியல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியல் அனுப்புவது குறித்து வெளியாகியுள்ள தகவல் குறித்து இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 6, 2023 - 23:34

பெரும்பாலான நுகர்வோர்கள் உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்தும் நிலையில், வழமையாக ஒரு மாத கட்டணம் செலுத்த தவறிய பின்னர் சிவப்பு பட்டியல் வழங்கப்பட்டு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதன்பின்னரே மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 2023ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 5 இலட்சத்து 44 ஆயிரத்து 488 மின்வெட்டு மற்றும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சராசரியாக ஒரு வருடத்தில் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்கள் புதிய மின் இணைப்புகளைப் பெறுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மின்சார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட இ-பில் முறையின் படி சிவப்பு கட்டணங்கள் வழங்குவது படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதுடன், மிக விரைவில் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் நிலுவைத் தொகை அறிவிக்கப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!