தனிமையில் இருந்த பெண் சடலமாக மீட்பு
காலை வீட்டை விட்டுச் சென்றிருந்த நிலையில், மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அறையில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் தாய் சடலமாக கிடந்துள்ளார்.

தங்கொட்டுவ, கட்டுகெந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு நேற்று (31) கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுகெந்த தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் தனது மகனுடன் கட்டுகெந்த பிரதேசத்தில் உள்ள ஓடு தொழிற்சாலைக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அவரது மகன் நேற்று (31) காலை வீட்டை விட்டுச் சென்றிருந்த நிலையில், மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அறையில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் தாய் சடலமாக கிடந்துள்ளார்.
பின்னர் இது குறித்து பொலிஸாருக்கு மகன் அறிவித்துள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.