இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 485 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

நவம்பர் 2, 2023 - 12:20
நவம்பர் 2, 2023 - 12:20
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 485 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

"இலங்கையில் இந்த ஆண்டு 4,100 எச்.ஐ.வி நோய்த்தொற்றார்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் இறுதி வரை, 485 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ஒரு அதிகரிப்பாக நாங்கள் பார்க்கிறோம். இவற்றில் 80% ஆண்கள் மத்தியில் பதிவாகியுள்ளது. எச்.ஐ.வி தொற்று 15-49 வயதிற்கு இடையில் அதிகமாக அதிகரித்து வருகிறது."

இந்த நிலையில், டிசெம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தினால் பொதுமக்களை அறிவூட்டும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது” கலாநிதி ஜானகி விதானபத்திரன குறிப்பிட்டார்.

"பெரும்பாலான வேலைத்திட்டங்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் செய்யப்படுகின்றன, ஏனெனில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் அந்த இரண்டு பகுதிகளிலும் உள்ளன” என்றும் அவர் கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!