பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம்
கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் புதிய பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் புதிய பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (05) இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றியடைந்ததையடுத்து, புதிய பிரதி சபாநாயகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வாக்கெடுப்பில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 148 வாக்குகளையும் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் 65 வாக்குகளையும் பெற்றனர்.
3 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக பதிவுசெய்யப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மயந்த திசாநாயக்க, வினோ நோக இராதலிங்கம், உத்திக பிரேமரத்ன, இம்ரான் மௌரூப், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஜோன் செனவிரத்ன ஆகியோர் சமூகமளிக்கவில்லை.
பிரதி சபாநாயகராக செயற்பட்டிருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அண்மையில் அறிவித்திருந்தார்.