வடக்கு மக்களின் பிரச்சினைகளை ரணில் தீர்ப்பார் - மாவை நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (7) பிற்பகல் இடம்பெற்றது.

செப்டெம்பர் 8, 2024 - 10:47
வடக்கு மக்களின் பிரச்சினைகளை ரணில் தீர்ப்பார் - மாவை நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (7) பிற்பகல் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள சேனாதிராஜாவின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.

யாழ்ப்பாணத்தில் இரண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டங்களில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்திருந்த போதே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா, ஜனாதிபதியுடனான சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரங்கள்,தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நீண்ட காலமாக தீர்க்கப்படாத வடக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் பாரிய பொறுப்பு உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!