எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறீர்கள்...! மேற்குலக ஊடகங்களை சாடிய ஜனாதிபதி
சர்வதேச விசாரணை வட்டத்தில் இலங்கையை மட்டும் குறி வைப்பது ஏன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கேள்வியெழுப்பியுள்ளார்.

சர்வதேச விசாரணை வட்டத்தில் இலங்கையை மட்டும் குறி வைப்பது ஏன்? என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கேள்வியெழுப்பியுள்ளார்.
Deutsche Welle சர்வதேச ஊடகத்துக்கு ஜனாதிபதி ரணில் வழங்கிய செவ்வியில், இலங்கையின் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதில் இலங்கைக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் சர்வதேச விசாரணை வட்டத்தில் எங்களை மட்டும் குறி வைப்பது ஏன்?
இவ்வாறான சம்பவம் அமெரிக்காவிலோ அல்லது வேறு மேற்கு நாடுகளிலோ இடம்பெற்றால் அந்த நாடுகளில் சர்வதேச விசாரணையை கேட்பீர்களா?, ஆசியர்களாகிய எம்மை மட்டும் இரண்டாம் தர பிரஜைகளாக பார்க்கிறீர்களா? அவ்வாறான கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்?” என ஜனாதிபதி ரணில் கேள்வி எழுப்பினார்.
கேள்வி கேட்க அழைத்துவிட்டு, எங்களை சிறுமைப்படுத்துவது மேற்கத்திய நாடுகளின் மனநிலையை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உண்மையான தரவுகள் இல்லமால், மனித உரிமை மீறப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாகவும் அதை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.