வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழு வந்தார் ரணில்!
முன்னதாக இம்மாதம் 17ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுற்கு ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட வாக்குமூலத்தை வழங்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில், இன்று (28) காலை முன்னிலையாகியுள்ளார்.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, நிதி முறைகேடு தொடர்பில் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் தொடர்பில் விசேட வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இம்மாதம் 17ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுற்கு ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டார்.
எனினும், சம்மனுக்கு பதிலளிக்கும் விதமாக, ரணில் விக்ரமசிங்க, ஆணையத்தில் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும், புத்தாண்டு விடுமுறை காலத்தில் தனது வழக்கறிஞர்கள் கொழும்பில் இருக்க மாட்டார்கள் என்பதால் வேறு திகதியைக் கோருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதனடிப்படையில் வழங்கப்பட்ட புதிய திகதியின் படி அவர் இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.