18 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்குள் நுழைந்த ராகு: எந்த ராசிக்கு நன்மை, யாருக்கு மோசம்?
2025 ஆம் ஆண்டின் மே 18 ஆம் தேதி ராகுவின் ராசி மாற்றம் நிகழ்ந்தது. ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைந்தார். கும்ப ராசியில் ராகு 2026 ஆம் ஆண்டின் டிசம்பர் 05 ஆம் தேதி வரை இருப்பார்.

ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. நிழல் கிரகமான ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பார். ராகுவிற்கு சொந்த ராசி எதுவும் இல்லை. இப்படிப்பட்ட ராகு ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை இருப்பார்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் மே 18 ஆம் தேதி ராகுவின் ராசி மாற்றம் நிகழ்ந்தது. ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைந்தார். கும்ப ராசியில் ராகு 2026 ஆம் ஆண்டின் டிசம்பர் 05 ஆம் தேதி வரை இருப்பார்.
கும்ப ராசிக்கு ராகு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். இந்த ராகு பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
இப்போது ராகு கும்ப ராசிக்கு சென்றிருப்பதால் 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு ராகு சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். லாட்டரி, பங்குச் சந்தையில் அதிக ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களால் நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், அதிகமாக நண்பர்களை நம்புவதைத் தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு ராகு சென்றுள்ளார். இது தொழில் மற்றும் சமூக பிம்பத்துடன் தொடர்புடைய வீடு. இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கக்கூடும். இக்காலத்தில் சச்சரவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலைகளையும் பொறுமையுடன் கையாள வேண்டும். வேலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு ராகு சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கலாம். மாணவர்கள் உயர் படிப்பை மேற்கொள்ள விரும்பலாம். இருப்பினும், அதற்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், அதிகமாக அலைய வேண்டியிருக்கும். அதிர்ஷ்டம் படிப்படியாக உங்களுக்கு சாதகமாக இருக்கும். இருந்தாலும் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு ராகு சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். நிதி சுமை அதிகரிக்கும். இக்காலத்தில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும். ஆரோக்கியம் குறித்த கவலைகள் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு ராகு சென்றுள்ளார். இதனால் திருமணமானவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். குடும்ப உறவுகளில் பதற்றமும், தவறான புரிதலையும் அதிகம் சந்திக்க நேரிடும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் கோபத்தையும், பயன்படுத்தும் வார்த்தைகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு ராகு சென்றுள்ளார். இந்த வீடு போட்டி, எதிரிகள் மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. உங்கள் எதிரிகளை வெற்றிகரமாக வீழ்த்துவீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். தொடர்ந்து தன்னலமின்றி கடினமாக உழைத்தால், உங்கள் மரியாதை அதிகரிக்கும். சட்ட விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு ராகு சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒருவித மன பதட்டத்துடன், உணர்ச்சிகளில் உறுதியற்ற தன்மையுடன் இருப்பார்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த மற்றும் சீராக வைத்துக் கொள்ள கடவுள் வழிபாடு, தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். புதுமண தம்பதிகள் குழந்தைகள் குறித்து கவலைப்படுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு ராகு சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்பம் மற்றும் வீட்டு விஷயங்களில் சில அமைதியின்மை ஏற்படக்கூடும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதில் தடைகளை சந்திக்க நேரிடும். எந்த ஒரு முக்கியமான முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு ராகு சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சரியான திசையில் முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும். புதிய வேலையை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். இருப்பினும், அகங்காரத்தையும் அவசரத்தையும் தவிர்க்க வேண்டும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு ராகு சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சு மற்றும் செல்வம் பாதிக்கப்படும். எந்தவொரு விஷயமும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நிதி நிலையில் பாதிப்பை சந்திக்க நேரிடும். முதலீடுகளை செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு ராகு சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை, எண்ணங்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்படும். அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். யோகா, தியானம் மற்றும் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். சுயபரிசோதனை மற்றும் அமைதியான மனதுடன் எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு ராகு சென்றுள்ளார். இது வெளிநாட்டு பயணம், செலவுகள் மற்றும் மறைக்கப்பட்ட எதிரிகளுடன் தொடர்புடைய வீடு. இந்த ராகு பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணத்தை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பை சந்திக்க நேரிடும். வணிகர்கள் எந்த ஒரு பெரிய திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன், ஒரு நிபுணரை அணுக வேண்டும். இல்லாவிட்டால், எதிர்பாராத இழப்பு ஏற்படக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)