புஸ்ஸல்லாவ பஸ் விபத்து; 8 பேர் காயம்
புத்தளத்திலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதிக்கு சென்ற குறித்த பஸ் இன்று (10) பிற்பகல் 12.30 மணியளவில் வீதியிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது.

புத்தளம் பகுதியிலிருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் ஹெல்பொட கட்டுக்கித்துல பகுதியில் பிரதான வீதியிலேயே குடைசாய்ந்துள்ளது.
புத்தளத்திலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதிக்கு சென்ற குறித்த பஸ் இன்று (10) பிற்பகல் 12.30 மணியளவில் வீதியிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 22 பேரில் 8 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பஸ் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 08 பேரில், கொத்மலை வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக 4 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். (க.கிஷாந்தன்)