மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதி
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை எரிசக்தி அமைச்சு இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மின்சாரக் கட்டணத்தை நூறு வீதத்தால் அதிகரிக்க PUCSL அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயத்தை அறிவிப்பதற்காக ஊடகவியலாளர் மாநாட்டை இன்று (26) நடத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைப்பது தொடர்பில் மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட போதிலும் இதுவரையில் அமைச்சரவையினால் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.