மூன்றாவது நாளாகவும் தையிட்டியில் ஆர்ப்பாட்டம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் நேற்று (13) மூன்றாவது நாளாக முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் பலரும் பங்கேற்றிருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
“காணி உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும். கட்சி பேதங்கனை புறந்தள்ளிவிட்டு இதில் பலரும் பங்கேற்றிருப்பது இதனையே காட்டுகிறது. சட்டத்தின் ஆட்சியை மதிக்கின்றவர்கள் இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.