பஸ்ஸுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

படையினரை ஏற்றி வந்த பஸ்ஸே மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது...

ஏப்ரல் 1, 2022 - 09:38
ஏப்ரல் 1, 2022 - 10:09
பஸ்ஸுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

ஜனாதிபதியின் வீட்டின் முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களால் பஸ் ஒன்று தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தின் நுழைவாயிலுக்கு அருகாமையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து அங்கு ஏராளமானோர் குவிந்த நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவம் மற்றும்  அதிரடி படையினரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. 

அத்தனையும் மீறி போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், படையினரை ஏற்றி வந்த பஸ்ஸே மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!