சபைக்குள் இனி இதனை செய்ய தடை... சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

சபையில் குழப்பங்கள் ஏற்பட்டதை அடுத்து முற்பகல் 10:35 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை நடவடிக்கை முற்பகல் 11:14 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. 

நவம்பர் 21, 2023 - 16:09
சபைக்குள் இனி இதனை செய்ய தடை... சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

பாராளுமன்ற சபைக்குள் இருந்து, திறன்பேசி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களின் ஊடாக, சபை நடவடிக்கைகளை  சமூக வலைத்தளங்களில் நேரலை செய்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று சபையில் குழப்பங்கள் ஏற்பட்டதை அடுத்து முற்பகல் 10:35 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை நடவடிக்கை முற்பகல் 11:14 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. 

அதன்பின்னர் விசேட அறிவிப்பொன்றை விடுத்து உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனைக் கூறினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!