கொழும்பில் சில வீதிகளில் தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
கொட்டாவை - பொரளை மற்றும் கொட்டாவை - கல்கிஸை ஆகிய வழித்தடங்களில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

கொட்டாவை - பொரளை மற்றும் கொட்டாவை - கல்கிஸை ஆகிய வழித்தடங்களில் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த வழித்தடங்களில் 10 சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பஸ் தொழிற்சங்கங்களுக்கு தெரிவிக்காமல் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பஸ் ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.