ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கை
ஜனாதிபதி தேர்தல் திகதி அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நாளை (ஜூலை 26) வெளியிடப்படவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் திகதி அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நாளை (ஜூலை 26) வெளியிடப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் வேட்புமனுக்களை கோருவது தொடர்பான திகதிகள் வர்த்தமானியில் உள்ளடக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இன்று கூட்டப்பட்ட கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
ஜூலை 17, 2024 முதல், ஜனாதிபதித் தேர்தல் தேதியை அறிவிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு ரீதியாக அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.