ஜனாதிபதி தேர்தல்: தபால் மூல வாக்குப்பதிவு திகதிகள் குறித்த அறிவிப்பு!
குறியிடப்படாத தபால் வாக்குகளுக்கான மறுகுறிப்பு திகதி செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவுகள் நடைபெறும் திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, மாவட்டச் செயலகம், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸாருக்கு தபால் மூல வாக்குப்பதிவு செப்டெம்பர் 4 ஆம் திகதி நடைபெறும். அத்துடன், தபால் மூலம் வாக்களிக்கக் கோரிய ஏனைய தரப்பினருக்கு செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
குறியிடப்படாத தபால் வாக்குகளுக்கான மறுகுறிப்பு திகதி செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வௌியிடுத்தல் மற்றும் தபாலுக்கு வழங்குதல் எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஊடகங்களில் வெளியாகியுள்ள இச்செய்தியை தேர்தல் ஆணையகம் மறுத்துள்ளது. இது, தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு அல்ல என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.