ஜனாதிபதியின் வியட்நாம் விஜயம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மே மாதம் வியட்நாமுக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர், சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையில், ஜனாதிபதி வியட்நாமில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாகவும், மேலும் இந்த முன்மொழிவுகள் நேற்று (28) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.