ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவுக்கு பயணம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (17) அதிகாலை சென்றுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (17) அதிகாலை சென்றுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 03.30 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 649 என்ற விமானத்தில் நாட்டை விட்டு புறப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டு, பிரான்சின் பாரிஸில் நடைபெறவுள்ள புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்சில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.
ஜூன் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டின் இந்த ஆண்டு தொனிப்பொருளானது, "இன்று உலகம் எதிர்கொள்ளும் நெருக்கடியான சவால்களுக்கு தீர்வு காண்பது" என்பதாகும்.
உலக சமூகத்தை பாதித்துள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பது குறித்து இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது. (News21.lk)