ஐநா செயலாளர் குட்டரஸை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
பிரான்சில் புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்துக்கான உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அங்கு சென்றுள்ள நேரத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் உடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரான்சில் புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்துக்கான உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அங்கு சென்றுள்ள நேரத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ், அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பல உலகத் தலைவர்கள் தற்போது பிரான்ஸ் நடத்தும் இரண்டு நாள் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
இலங்கை தொடர்பில் அமெரிக்கா மகிழ்ச்சி
இதற்கிடையில், ஏற்கனவே கடுமையான நிதி அழுத்தத்தில் உள்ள ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் பெரும் பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால், அமெரிக்க-சீனா பதட்டங்களை நிவர்த்தி செய்வதை வல்லரசுகள் இலக்காகக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
அத்துடன், பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதியளிப்பு உடன்படிக்கைக்கான சர்வதேச உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கடனை உடனடியாக மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அதிகாரத்துவம் மற்றும் ஏனைய புவிசார் அரசியல் பிரச்சினைகள் கடன் நிவாரணத்தை தாமதப்படுத்துவதாக ஜனாதிபதி கூறினார்.