ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று பேச்சு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் வியாழக்கிழமை (5) விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் வியாழக்கிழமை (5) விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளார்.
இந்த சந்திப்பு மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற முன்னைய சந்திப்புகளின் தொடர்ச்சியாக இன்றைய சந்திப்பில் விரிவாக ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.