பாம்பு தீண்டி உயிரிழந்த கர்ப்பிணி; திருமலையில் சோகம்

மூன்று மாத கர்ப்பிணி, மாடு கட்டுவதற்காக சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.

பெப்ரவரி 21, 2024 - 15:57
பாம்பு தீண்டி உயிரிழந்த கர்ப்பிணி; திருமலையில் சோகம்

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாம்பு கடிக்கு இலக்காகி 3 மாத கர்ப்பிணித் உயிரிழந்துள்ளார்.

நேற்று(20) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இமேஷா குமாரி (வயது 23) என்ற மூன்று மாத கர்ப்பிணி, மாடு கட்டுவதற்காக சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.

இதனையடுத்து, மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!