நாடு முழுவதும் 70,000க்கும் மேற்பட்ட மின்துண்டிப்பு சம்பவங்கள்
மீதமுள்ள இணைப்புக்களை விரைவாக மீட்டெடுக்க கூடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (1) பிற்பகல் மாலை 5:00 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 70,012 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
அவற்றில் 41,684 மின் இணைப்புகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
மீதமுள்ள இணைப்புக்களை விரைவாக மீட்டெடுக்க கூடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.