நிதி மோசடி தொடர்பில் வெலிக்கடை பொலிஸாரால் பிரபல நடிகை சேமினி கைது
நடிகை சேமினி இதமல்கொட, வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை சேமினி இதமல்கொட, வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி தொடர்பிலான 7 பிடியாணைகள் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்காலை, மாத்தறை மற்றும் கொழும்பு நீதிமன்றங்களால் இந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிக்கடை பொலிஸாரால் நேற்று (10) இரவு கைது செய்யப்பட்ட சேமினி இதமல்கொட, இன்று (11) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.