இலங்கையில் வறிய மக்களின் எண்ணிக்கை உயர்வு
கடந்த நான்கு ஆண்டுகளில் 40 இலட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் 40 இலட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேனர் ஏஷியா நிறுவனத்தினால் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டில் நாட்டின் மொத்த வறியோர் எண்ணிக்கை ஏழு மில்லியன் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்வோரில் 81 வீதமானவர்கள் கிராமிய மக்கள் எனவும் கிராமிய வறுமை நிலைமை இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தோட்ட மக்களின் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் வாடுவதாகவும், நகரப் பகுதிகளில் நிலவும் வறுமை நிலைமை வெகுவாக உயர்வடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.