செவ்வந்தியை கண்டுபிடிக்க உதவுவோருக்கு பணப்பரிசு அறிவிப்பு

குறித்த பெண் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு பணப்பரிசு வழங்க தயாராக உள்ளதாக அறிவிப்பு,

பெப்ரவரி 20, 2025 - 16:40
செவ்வந்தியை கண்டுபிடிக்க உதவுவோருக்கு பணப்பரிசு அறிவிப்பு

புதுக்கடை நீதிமன்றில் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய, பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். 

பெயர்:- இஷாரா செவ்வந்தி
வயது: - 25 ஆண்டுகள்
அடையாள அட்டை -  995892480
முகவரி:- 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை, கட்டுவெல்லேகம.

குறித்த பெண் தொடர்பான தகவல்களை கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவின்  பணிப்பாளரின் அலைபேசி இலக்கமான 071 - 8591727 அல்லது பொறுப்பதிகாரியின் 071 - 8591735 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பெண் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு பணப்பரிசு வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், தகவல் வழங்குவோரின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!