பணியில் இருக்கும்போது தூங்கிய பொலிஸார் குறித்து விசாரணை
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க, இந்த சம்பவம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாகக் கூறினார்.

பணியில் இருக்கும்போது பல பொலிஸ் அதிகாரிகள் தூங்குவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க, இந்த சம்பவம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாகக் கூறினார்.
"பல பொலிஸ் அதிகாரிகள் தங்கள் பணி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தூங்குவதை காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது," என்று எஸ்.எஸ்.பி மனதுங்க கூறினார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ்மா அதிபர் சம்பந்தப்பட்ட பிரிவின் மூத்த அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், விசாரணை நடத்த பொலிஸ் சிறப்பு புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் மனதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.