தலதா மாளிகைக்குள் ‘ப்ரீ ஷூட்’ - விசாரணை ஆரம்பம்

மாளிகைக்குள் உள்ள மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த ஜோடி புகைப்படம் எடுத்துள்ளமை சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

செப்டெம்பர் 9, 2024 - 10:33
தலதா மாளிகைக்குள் ‘ப்ரீ ஷூட்’ - விசாரணை ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்குள் அண்மையில் திருமணமான தம்பதியொன்று படப்பிடிப்பு நடத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாளிகைக்குள் உள்ள மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த ஜோடி புகைப்படம் எடுத்துள்ளமை சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல, சம்பவம் தொடர்பில் தனக்குத் தெரியப்படுத்தியதாகவும், பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் உறுதிப்படுத்தினார். 

இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக புகைப்படக் கலைஞருடன் தம்பதியினர் இன்று (09) கண்டிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!