கல்விசாரா ஊழியர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்
விரிவுரையாளர்களின் சம்பளத்தை மாத்திரம் அதிகரிக்கும் தீர்மானத்துக்கு பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு எதிர்ப்பு வெளியிட்டது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
விரிவுரையாளர்களின் கொடுப்பனவை மாத்திரம் அதிகரிக்கம் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (18) காலை ஆரம்பித்தனர்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கல்விக் கொடுப்பனவு 25 வீதத்தால் அதிகரிக்கப்பட்டு ஜனவரி மாத சம்பளத்தில் சேர்க்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, விரிவுரையாளர்களின் சம்பளத்தை மாத்திரம் அதிகரிக்கும் தீர்மானத்துக்கு பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு எதிர்ப்பு வெளியிட்டது.
அத்துடன், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.