போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் பொலிஸாரால் கைது
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் போராட்டத்தின் போது, போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் போராட்டத்தின் போது, போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு நகர மண்டபத்தில் இருந்து ஆரம்பமானது.
முன்னதாக, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் மற்றுமொரு எதிர்ப்பு பேரணியின் மீது, விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம் நடத்தப்பட்டது.
இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் கொழும்பில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றமும் இன்று (10) காலை தடுப்பு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.