பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டன - விவரம் இதோ!
எரிபொருள் விலைகள் இன்று (30) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலைகள் இன்று (30) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி, பெட்ரோல் ஒக்டேன் 92 லிட்டருக்கு 6 ரூபாய் குறைந்து 293 ரூபாய் ஆகவும், பெட்ரோல் ஒக்டேன் 95 லிட்டருக்கு 20 ரூபாய் குறைந்து 341 ரூபாய் ஆகவும் இருக்கும்.
ஒட்டோ டீசல் லிட்டருக்கு 12 ரூபாய் குறைந்து 274 ரூபாய் ஆகவும், சுப்பர் டீசல் லிட்டருக்கு 6 ரூபாய் குறைந்து 325 ரூபாய் ஆகவும் இருக்கும்.
அத்துடன், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைந்து 178 ரூபாய் ஆக விற்கப்படும்.