தேர்தலில் விசேட தேவையுடையோர் வாக்களிக்க வாய்ப்பு!
இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும் வாக்களிக்கும் வசதிகள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

நாட்டில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிக்கும் வகையில் வசதி வாய்ப்புக்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும் வாக்களிக்கும் வசதிகள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அதன்படி, பார்வையற்றோர் தங்கள் வாக்குச் சீட்டில் உள்ள அடையாளங்களை பிரெயில் (Braille) எழுத்து முறையிலும், செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் சைகை மொழியிலும் அடையாளம் காணும் வகையில் வசதிகள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதயும் படிங்க| ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவசர தீர்மானம்