மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்
மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று காலை 5.43 மணியளவில் யாங்கன் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவானது.
இந்நிலநடுக்கம் 48 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
இது கடந்த 24 மணிநேரத்திற்குள் ஏற்பட்ட 3-வது நிலநடுக்கம் ஆகும்.
Also Read - இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான நேரம் நீடிப்பு
அதற்கு 3 மணிநேரத்திற்கு முன்னர், 2-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. அது அதிகாலை 2.53 மணியளவில் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவான அந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது.
Also Read - பெண்கள் சிறையில் வன்முறை; 41 கைதிகள் மரணம்
அதற்கு முன்பு முதல் நிலநடுக்கம் நேற்றிரவு 11.56 மணியளவில் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது. அந்நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது.
எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.