யாழ்ப்பாணத்தில் மீண்டும் எரிபொருள் நிலையங்களில் குவிந்த மக்கள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் உள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் உள்ளனர்.
யாழ். நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுகின்றனர்.
இதேவேளை, எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் மக்கள் தாமாகவே எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் கூடி எரிபொருளைப் பெற முயற்சிக்கின்றனர் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தேவையான அளவு எரிபொருள் உள்ளதாகவும், செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என்று அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர் நிலவரத்தால் எரிபொருள் விநியோகத்தில் தடை ஏற்படலாம் என, மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதனால், நாடு முழுவதும் எரிபொருளுக்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை பரவலாகக் காண முடிகிறது.