சீரற்ற வானிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
இதனால், காசல் ரி, மவுசாக்கலை, லக்ஸபான, நவ லக்ஸபான, பொல்பிட்டிய, கெனியோன் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வான் பாயும் நிலையை எட்டியுள்ளன.
இந்த நிலையில் இந்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் எந்த வேளையிலும் திறக்கப்படலாம் என்பதனால் நீர்த்தேக்கத்தின் கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று இரவு முதல் நோட்டன் பிரிஜ் பகுதிக்கு பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருகின்றது.
இதனால், களனி கங்கைக்கு அண்மையில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்துக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.