'இரட்டை சதம் அடித்த இலங்கை வீரர்... மொத்தம் 381 ரன்கள்... ஒருநாள் கிரிக்கெட்டில் மெகா சாதனை!

ஓபனர் பதும் நிஷங்க கடைசிவரை, ஆட்டமிழக்காமல் விளையாடி அசத்தினார். மொத்தம் 139 பந்துகளை எதிர்கொண்ட அவர் 20 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 210 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். 

பெப்ரவரி 10, 2024 - 01:04
'இரட்டை சதம் அடித்த இலங்கை வீரர்... மொத்தம் 381 ரன்கள்... ஒருநாள் கிரிக்கெட்டில் மெகா சாதனை!

இலங்கை வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

தற்போது நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இலங்கை அணியில், ஓபனர் பதும் நிஷங்க துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார். மற்றொரு ஓபனர் அவிஷ்க பெர்ணான்டோவும் அபாரமாக செயல்பட்டதால், ஸ்கோர் கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. 

182 ரன்கள் வரை இந்த இணை நீடித்த நிலையில், பெர்ணான்டோ 88 பந்துகளில் 88 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து, கேப்டன் குஷால் மெண்டிஸ் 16 (31), சமரவிக்ரம 45 (36) போன்றவர்களும் ஓரளவுக்கு ரன்களை அடித்தார்கள்.

ஓபனர் பதும் நிஷங்க கடைசிவரை, ஆட்டமிழக்காமல் விளையாடி அசத்தினார். மொத்தம் 139 பந்துகளை எதிர்கொண்ட அவர் 20 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 210 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். 

இலங்கை அணிக்காக, முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த வீரராக நிஷங்க திகழ்கிறார். நிஷங்க அதிரடி காட்டியதால், இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 381/3 ரன்களை குவித்து அசத்தியது. 

இதற்குமுன், 2000ஆம் ஆண்டில், இந்தியாவுக்கு எதிராக சனத் ஜெயசூர்யா அடித்த 189 ரன்கள்தான், அதிகபட்ச ஸ்கோராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!