பாராளுமன்றத்தில் முன்னெடுக்கவுள்ள புனரமைப்பு பணிகள்
பாராளுமன்ற கட்டிடத்தின் புனரமைப்பு பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத்தின் புனரமைப்பு பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
40 வருடங்கள் பழமையான பாராளுமன்ற கட்டிடத்தில் சில புனரமைப்புகள் தேவைப்படுவதாகவும், அந்த புனரமைப்புகளை கண்டறிந்து அதற்கான பணிகளை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் அங்கு கூறியுள்ளார்.
அதன்படி, கடந்த 25ம் திகதி சபாநாயகர் தலைமையில் நடந்த ஆலோசனைக் குழு கூட்டத்தில், மேற்கொள்ள வேண்டிய பணிகள் கண்டறியப்பட்டு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மத்திய பொறியியல் ஆலோசனைக் குழுவின் உதவியுடன் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க கொள்கை உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.