எங்க பந்துவீச்சு ரொம்ப மோசமா இருந்துச்சி.. விக்கெட்டே எடுக்கல.. தோல்வி குறித்து பாபர் அசாம் கருத்து
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கை அணியும் பலப் பரீட்சை நடத்தியது. அரை இறுதிப் போட்டி போல் கருதப்பட்ட சூப்பர் 4 சுற்றில் முக்கிய ஆட்டத்தில் பாகிஸ்தானை இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கை அணியும் பலப் பரீட்சை நடத்தியது. அரை இறுதிப் போட்டி போல் கருதப்பட்ட சூப்பர் 4 சுற்றில் முக்கிய ஆட்டத்தில் பாகிஸ்தானை இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.
உலகின் நம்பர் ஒன் அணியாக வலம் வந்த பாகிஸ்தான அணி இறுதிப் போட்டிக்கு கூட செல்ல முடியாமல் போனது அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
தோல்வியை நம்ப முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் களத்திலே சோகமாக அமர்ந்திருந்தனர். இந்த நிலையில் தோல்வி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் அளித்துள்ள பேட்டியில், எங்களுடைய பந்துவீச்சு மோசமாக இருந்தது.
இலங்கை அணி வீரர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள். அதனால் தான் இன்று அவர்கள் வெற்றி பெற்றார்கள். எங்களுடைய பந்துவீச்சும் சரி பில்டிங்கும் சரி சரியான தரத்தில் இல்லை.
இதனால் தான் நாங்கள் தோற்றோம். இதேபோன்று ஆட்டத்தின் நடு ஓவர்களில் எங்களுடைய பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. இலங்கை அணி பார்ட்னர்ஷிப்பை எங்களால் பிரிக்க முடியவில்லை. மெண்டிஸ், சமரவேக்கிரமா ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தது தான் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் தோல்வியை தழுவினோம்.
இலங்கை அணி பேட்டிங் தொடக்கத்திலும் சரி ஆட்டத்தை முடித்ததிலும் சரி சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் நடு ஓவர்களில் விக்கெட்டை எடுக்கவில்லை.
இதனால் தான் நாங்கள் தோல்வி அடைந்தோம். கடைசி கட்டத்தில் எங்களுடைய சிறந்த பவுலர்கள் பந்து வீச வேண்டும் என நான் முடிவு செய்தேன். அதனால் தான் ஆட்டத்தின் கடைசி ஓவருக்கு முதல் ஓவரை நான் கொடுத்தேன்.அதன் பிறகு இறுதி ஓவரை ஷமான் கானிடம் கொடுத்தேன். அவர் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் தோல்வியை தழுவி விட்டோம். ஆட்டத்தின் நடு ஓவர்களில் நாங்கள் விக்கெட்டை எடுக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாபர் அசாம் கூறினார்.
பாகிஸ்தான் அணியில் நசிம் சா, ஹாரிஸ் ரவுப் ஆகிய இரண்டு முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் மாற்று வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் பாகிஸ்தான அணியின் தொடக்க பேட்டிங் வரிசை ஜொலிக்கவில்லை. இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது.