தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு!

இந்தச் சலுகையானது ஜூலை 3 ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையான ஒரு வார காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்

ஜுன் 30, 2023 - 23:21
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு!

தேசிய விலங்கியல் திணைக்களத்தின் 87ஆவது ஆண்டு நிறைவையொட்டி, தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், 12 வயதுக்குட்பட்ட சகல சிறார்களுக்கும் தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்படும் என தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்தார்.

மேலும், இந்தச் சலுகையானது ஜூலை 3 ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையான ஒரு வார காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!